Quantcast
Channel: வாழ்நிலம்
Viewing all articles
Browse latest Browse all 181

மலையாள சினிமாவின் எழுபத்தைந்து ஆண்டுகள் - 4

$
0
0
மலையாள சினிமாவின் எழுபத்தைந்து ஆண்டுகள் - 4




இந்தியவாழ்க்கையின்மொத்தமானபருவநிலையே 1970 - 80 வரையிலானகாலப்பகுதியில்தொடர்ந்துமாற்றத்துக்குஉள்ளாகியிருந்தது.விடுதலைக்குப்பிற்பட்டகாலகட்டத்தில்அரசியல்சார்ந்துபுதியவிழிப்புணர்வும்கோட்பாடுகளும்அரங்கேறின.கலாச்சாரத்துறையிலும்மாற்றங்கள்நிகழ்ந்தன.கேரளசமூகத்தில்இந்தமாற்றங்கள்விரிவானபாதிப்பைச்செலுத்தின.அதன்பரவலானசெல்வாக்குகலைத்துறைகளிலும்பிரதிபலித்தது.திரைப்படக்கலையும்இதற்குவிலக்காக வில்லை.
திரைப்படச்சங்கங்களின்விரிவானசெயல்பாடுகள்,புதியஇயக்குநர்களின்பிரவேசம்,படத்தயாரிப்புமுறையில்நிகழ்ந்தமாறுதல்கள்இவையனைத்தும்புதியஒருகாட்சிக்கலாச்சாரத்தைமுன்வைத்தன.உலகசினிமாவரைபடத்தில்கேரளம்என்றசின்னமாநிலம்தனதுஇடத்தைஉறுதிசெய்துகொண்டது.

புதியஅலைஎன்றும்நவசினிமாஎன்றும்அழைக்கப்பட்டஇந்தமாற்றம்திரைப்படத்தின்உற்பத்திநிலைகளைமட்டுமல்லவிநியோகக்கட்டமைப்பு களையும்பார்வையாளர்ரசனையையும்திருத்தியது.அதன்காரணமாகவேபுதியமுயற்சிகள்துணிந்துமேற்கொள்ளப்பட்டன. அவைபோதுமானஅளவுக்குஅங்கீகாரமும்பெற்றன.கலைமுயற்சியாகஉருவாக்கப்பட்டபடங்களும்வணிகஅடிப்படையில்தயாரிக்கப்பட்டபடங்களுக்குநிகராகவோஆதாயமானஅளவிலோபொருளாதாரவெற்றியும்ஈட்டின.'ஓளவும்தீரவும்','சுயம்வரம்'போன்றபடங்கள்கலாரீதியிலானவரவேற்புப்பெற்றஅதேதருணத்தில்வியாபாரநோக்கிலும்வெற்றியடைந்தன.
எண்பதுகளில்இடைவழிசினிமாக்கள்உருவாகஇதுதான்ஆரம்பத்தூண்டுதலாகஅமைந்தது.

சம்பிரதாயமானகதைபோக்குக்கொண்டதிரைப்படமாகஇருந்தும்'சுயம்வரம்'மலையாளநவசினிமாவில்  திசைமாற்றத்தின்முன்னோடியாகஅமையக்காரணம்அதுஉருவாக்கியபுதியகாட்சியுணர்வு.சினிமாவுக்குள்நிகழும்கதையாடல்அல்லவாஸ்தவத்தில்சினிமாஎன்றும்அதன்ஒவ்வொருஅம்சமும்கவனிக்கப்படவேண்டியதுஅவசியமென்றும்சினிமாஎன்பதுஒருமொத்தமானகலையென்றும்சுயம்வரம்கற்பித்தது.அதன்தொடர்ச்சிதான்மலையாளத்தின்மாற்றுத்திரைப்படக்கலை.

@



'சுயம்வரம்'பக்குவப்படுத்தியிருந்தரசனைமாற்றத்தில்நம்பிக்கைகொண்டுவெளிவந்தபடம்'நிர்மால்யம்'.தாம்எழுதியசிறுகதையொன்றைஅடிப் படையாகவைத்துதிரைக்கதைஉருவாக்கிஇயக்கவும்செய்திருந்தார்எம்.டி.வாசுதேவன்நாயர்.முன்னரேசிலபடங்களுக்குக்திரைக்கதைஎழுதியிருந்தஅனுபவமும்உலகசினிமாகுறித்தஞானமும்திரைப்படஇயக்கத்தில்அவருக்குத்துணைநின்றன.
'நிர்மால்ய'த்தின்கதைமையம்அன்றையசினிமாக்கலாச்சாரத்துக்குப்புதுமையானது.சாதாரணப்பார்வையாளனின்ரசனையைபடம்உலுக்கியது.

கேரளகிராமமொன்றில்வெளிச்சப்பாடாக (சாமியாடி) வாழும்ஒருவரின்துயரஜீவிதத்தின்சித்திரம்.மரபானநம்பிக்கைகளுடனும்உள்ளூர்பகவதியின்மீதுதீராதவிசுவாசமும்கொண்டவர்.காலத்தின்மாற்றம்அவரதுகுடும்பத்தின்ஆதாரநிலைகளைச்சிதிலப்படுத்துகிறது.பொருளாதாரநிர்ப்பந்தம்அவரைக் குலைக்கிறது .எல்லாவற்றுக்கும்பகவதிநிவாரணமாகஇருப்பாள்என்றஅடிப்படைநம்பிக்கைநொறுங்குகிறபோதுதகர்ந்துமடிகிறார்.இறப்புக்குமுன்தன்னைநிர்க்கதியாக்கியகடவுளின்முகத்தில்ரத்தமாகஉமிழ்கிறார்.இந்தஉச்சகட்டமனநிலையைநோக்கியேகதையாடலின்சம்பவங்கள்முன்னேறினஎன்பதுபடத்தின்முக்கியமானஅம்சமாகஇருந்தது.  வெளிச்சப்பாடாகபாத்திரமேற்றபி.ஜே.ஆண்டனியின்நடிப்பு,செறிவானகாட்சியமைப்பு,சவாலானகதைமையம்ஆகியவைபடத்தின்கலாபூர்வமானகுறைகள்பார்வையாளனின்கவனத்தில்நெருடாமல்காப்பாற்றின.'நிர்மால்ய'த்தில்பெற்றபடைப்பாக்கவெற்றியைஎம்.டி.வாசுதேவன்நாயரேஇயக்கியபிற்காலப்படங்கள்பெறவில்லைஎன்பதுநிர்மால்யத்தைஇன்றும்முக்கியமானமலையாளப்படங்களில்ஒன்றாகக்கருதச்செய்கிறது.



(அண்மையில்திருவனந்தபுரம்உலகப்படவிழாவில்'நிர்மால்யம்'திரையிடப் பட்டது. படத்தின்உச்சகட்டகாட்சிகளின்போதுநிலவியசுவாசம்எதிரொலிக்கும்அமைதியும்படம்முடிந்ததும்எழுந்ததொடர்ச்சியானகரவொலியும்முப்பதாண்டுகளுக்குப்பிறகும்அதை, புதியபடமாகவும்சமகாலத்தன்மையுள்ளபடமாகவும்உணரச்செய்தது. மதச்சார்புசக்திகள்ஆதிக்கம்செலுத்தும்இன்று'நிர்மால்யத்தை'எடுக்கமுனைந்தால்இயக்குநர்கழுவேற்றப்படுவதுநிச்சயம்என்றுஎம்.டி.குறிப்பிட்டதும்நினைவுக்குவருகிறது.)

கார்ட்டூனிஸ்டாகப்பிரபலமடைந்திருந்தஜி.அரவிந்தன்(1935 91) 'உத்தராயணம்' படம்மூலம்திரையுலகில்தன்இருப்பைஅறிவித்தார்.எதார்த்தவாதபாணியில்அமைந்தஅவரதுஒரேபடம்அதுவே.சமூகவாழ்க்கையின்குளறுபடிகளால்தடுமாற்றத்துக்குள்ளாகும்இளந்தலைமுறையின்கோபத்தையும்துயரத்தையும்படம்சொன்னது.பிற்காலத்தில்கலைப்படம்என்றஅடையாளத்துடனும்வணிகப்படம்என்றமுத்திரையுடனும்வெளியான'கோபக்காரஇளைஞர்'சினிமாவுக்குஉத்தராயணம்முன்மாதிரி.

இரண்டாவதுபடமான'காஞ்சனசீதா' (1977) முதல்'வாஸ்துஹாரா'(1990) வரைஒவ்வொருபடமும்ஒவ்வொருகளத்தையும்காட்சிநடையையும்கொண்டிருந்தன.. இதிகாசபாத்திரங்களானஇராமனையும்சீதையையும்இலட்சுமணனையும்கோதாவரிக்கரைஆதிவாசிகளாகச்சித்தரித்த'காஞ்சனசீதா'அதுவெளிவந்தகாலத்தில்துணிச்சலானமுயற்சியாகக்கருதப்பட்டது.இசையின்நிதானமும்காட்சிகளின்மரபுமீறியஅமைப்பும்புதியகதைமையங்களைஇலகுவாகக்கையாளும்நேர்த்தியும்அரவிந்தன்படங்களின்இலக்கணமாகஇருந்தன.பெரும்பாலானஅரவிந்தன்படங்கள்நேர்ப்போக்கில்நகரும்கதையாடலைப்புறக்கணித்தன. சர்க்கஸ்வாழ்க்கையைச்சித்தரித்த'தம்பு',குழந்தைக்கதையாகஉருவான'கும்மாட்டி'கிறித்துவசித்தனைமையமாகக்கொண்ட'எஸ்தப்பான்'மின்சாரத்தின்அறிமுகம்ஒருகிராமத்தில்ஏற்படுத்தும்ஜீவிதவினோதங்களைச்சொல்லும்'ஓரிடத்து'ஆகியபடங்கள்அரவிந்தனைகலைப்படவுலகின்நட்சத்திரமாக்கின.அவரதுநேர்த்தியானபடங்கள்என்று'கும்மாட்டி''எஸ்தப்பான்''சிதம்பரம்'போன்றபடங்களைச்சொல்லவேண்டும்.இன்றும்இவைபுதிரானஅழகியல்அனுபவத்துக்குஉத்தரவாதம்அளிப்பவை.வாழ்க்கைநிகழ்ச்சிகளின்அடுக்கில்மறந்திருக்கும்பூடகமானஅனுபவங்களேஅரவிந்தனின்காட்சிக்கலை.



புதியமலையாளசினிமாஎழுச்சியில்உருவானகுறிப்பிடத்தகுந்தபடம்கெ.பி. குமாரன்இயக்கிய'அதிதி'. சேகரன்என்றவிருந்தாளியின்வரவுக்காகஐந்துபிரதானகதாபாத்திரங்கள்காத்திருக்கிறார்கள்.'சேகரன்யார்?'என்றஒருபாத்திரத்தின் கேள்விக்குஇன்னொருபாத்திரத்தின்பதில். 'இந்தவீட்டின்விருந்தாளி..லட்சாதிபதி.. அழகன்..பெருந்தன்மையானவன்'ஆனால்படத்தில்சேகரன்என்றவிருந்தாளிகாட்டப்படுவதேஇல்லை. மாறாகஇந்தஐந்துபாத்திரங்களும்ஒருவிருந்தாளியைஎதிர்பார்த்திருப்பதன்மனவோட்டங் களையேபடம்கதையாடலாகக்கொண்டிருந்தது.
ஷாட்டுகளின்இடைவேளையில்நிகழ்பவற்றைக்கூர்ந்துகவனித்தால்மட்டுமேகதையாடலைப்பின்தொடரமுடியும்.அந்தஅளவில்அதுவரையில்லாதஅனுபவத்தைப பார்வையாளனுக்குக்கொடுத்ததுஇந்தப்படம்.அரூபமான(அப்ஸ்ட்ராக்ட்) விஷயங்களையும்சினிமாவில்சாத்தியப்படுத்தலாம்என்றுநிறுவியபடம்அதிதி. அதேகாலகட்டத்தில்அறிமுகமானஇயக்குநர்பவித்திரனின்'யாரோஒராள்'முதலானபடங்கள்இந்தப்போக்கின்இன்னொருதொடர்ச்சிஎனலாம்.இந்த அர்த்தத்தில்அதிதிக்குவரலாற்றுமுக்கியத்துவம்உண்டு.



புனேதிரைப்படக்கல்லூரியில்ரித்விக்கட்டக்கின்மாணவராகப்பயின்றுமாற்றுசினிமாவைப்பற்றியபெருங்கனவுகளுடன்வந்தவர்ஜான்ஆப்ரகாம்.அவரது
முதல்முயற்சிஒருவணிகப்படமாகஇருந்தது - 'வித்யார்த்திகளேஇதிலேஇதிலே. இரண்டாவதுமுயற்சிதமிழில்'அக்ரகாரத்தில்கழுதை'.இருபடங்களும்மலையாளத்திரைப்படத்துறையில்எந்தச்சலனத்தையும்ஏற்படுத்த வில்லை.ஆனால்மலையாளத்தில்ஆராதனைக்குரியஇயக்குநராகஜான்அங்கீகரிக்கப்பட்டார்.
'செறியாச்சன்டெகுரூரகிருத்தியங்ஙள்''அம்மஅறியான்'ஆகியவைஅவரதுமலையாளப்படங்களாகவெளிவந்தன.இவ்விருபடங்களின்மையங்களும்திரையாக்கமுறையும்சவாலானவை.ஆனால்திரைப்படமாகமுழுமையானகாட்சிஅனுபவத்தை வழங்கத்தவறியவை.சினிமாவைப்பற்றியவேறுபட்டபார்வையும்தயாரிப்புமுறையில்புரட்சியையையும்கொண்டிருந்தவர்ஜான். அவரதுபடங்கள்தயாரிப்பிலிருந்தகாலத்திலும்வெளியானகாலத்திலும்பரபரப்பானவிவாதப்பொருட்களாகவும்இருந்தன.'செறியாச்சனின்குரூர கிருத்தியங்ஙள்'படத்தைத்தவிர்த்துபிறபடங்களைபார்வையாளனைவில்க்கிநிறுத்துபவையே.சினிமாவைசார்ந்திருப்பதும்சினிமாவைஉருவாக்குவதும்இருவேறுகாரியங்கள்என்பதன்கச்சிதமானஉதாரணம்ஜான்ஆப்ரகாம். 


மக்களிடமிருந்துநிதிவசூல்செய்துதிரைப்படத்தயாரிப்பில்ஈடுபடுவதுஎன்றசாகசமும்மக்களுக்காகவேசினிமாஎன்றநோக்கில்அவர்காட்டியஈடுபாடுமேமலையாளசினிமாவரலாற்றில்ஜான்ஆப்ரகாமைநிலைநிறுத்தியிருக்கிறது. ஜானின்ஆவேசங்களால்தூண்டப்பட்டுஅந்தக்காலப்பகுதியில்வெவ்வேறுஇயக்குநர்கள்எடுத்தஇடதுசாரித்தன்மையுள்ளபடங்கள்கணிசமாகவெளி வந்தன. பி..பக்கரின்'கபனிநதிசுவன்னப்போள்'ஜான்ஆபிரகாமின்'அம்மஅறியான்'போன்ற எழுபதுகளின்சினிமாக்களின்கதைமையம்பின்னர்வந்தவணிகப்படங்களுக்குவிற்பனைச்சாத்தியமுள்ளபொருளானதுஒருமுரண்பாடு.இந்தஅம்சம்தான்எண்பதுகளில்இடைவழிசினிமாவுக்குஆதாரமாகஇருந்தது.



அதேஎண்பதுகளில்கலைப்படங்கள்என்றபிரிவும்உச்சத்திலிருந்தது.அடூர்கோபாலகிருஷ்ணனும்அரவிந்தனும்நவசினிமாவின்மெசியாக்களாகபோற்றப்
பட்டனர்.இதில்சரளமானஇயக்குநர்என்றசிறப்புக்குஅரவிந்தன்உரியவராகஇருந்தார்.அதற்குப்பொருத்தமானவராகஅதிகஇடைவெளியின்றிபடங்களைதந்துகொண்டிருந்தார். அவருக்குநேர்எதிர்அடூர்கோபாலகிருஷ்ணன். முதல்படம்வெளியானஐந்துஆண்டுகளுக்குப்பிறகேஅவரதுஇரண்டாவதுபடம்'கொடியேற்றம்'திரைக்குவந்தது. சினிமாக்கலையைமுழுமையாகநெருங்கியபடமாகஅதைக்குறிப்பிடவேண்டும்.வாழ்க்கையின்பொறுப்புகளைஉணராதகிராமத்துமனிதன்ஒருவன்மெல்லமெல்லஅன்றாடஅனுபவங்களிலிருந்துஅதைக்கற்றுக்கொள்வதுதான்கதை.பெரும்சம்பவங்களோதிருப்பங்களோஇல்லாமல்எதார்த்தமானதளத்தில்காட்சிகள்அமைக்கப்பட்டிருந்தன. 'சுயம்வர'த்தைவிடவும்வாழ்க்கையின்வாசனைபரவையிருந்தபடமாகஇருந்தது. சமாந்தரமானஇன்னொருவாழ்க்கையைசிருஷ்டிப்பதுதான்கலைஎன்றநோக்கத்தைதிட்டமாகஉணரச்செய்ததுபடம்.  படத்தின்ஒருகாட்சியில்வேகமாகப்போகும்ஒருலாரியைப்பார்த்துமையப்பாத்திரமானசங்கரன்குட்டிவெகுளித்தனமாகவியக்கிறான்.'', எந்தொருஸ்பீடு...''இந்தஉரையாடல்இன்றுசாதாரணப்பேச்சுவழக்கில்இடம்பெறும்மேற்கோளாகவேமாறியிருக்கிறது. சினிமாவிற்பன்னர்கள்என்றுஉரிமைபாராட்டிக்கொள்ளத்தெரியாதசாமான்யபார்வையாளர்களும்கொடியேற்றத்தைஅங்கீகரித்தனர்என்பதன்சான்றாகஇதைச்சொல்லலாம்.

ஓர்எளிமையானகதைஆடம்பரமில்லாமல்சொல்லப்பட்டதுஎன்பதும்பின்னணி இசையேஇல்லாமல் - பின்னணியிலுள்ளஒலிகள்அப்படியேஒலிப்பதிவுசெய்துபடத்தில்இணைக்கப்பட்டிருந்தன - சம்பவங்கள்காட்சியின்செறிவுடன்நகர்த்தப் பட்டனஎன்பதும்கொடியேற்றம்பார்வையாளர்களால்ஏற்கப்பட்டதன்காரணங்கள். கூடவே கோபியின்இயல்பானநடிப்பும்.

பிற்காலஅடூர்படங்கள்கணிசமானஇடைவெளியில்வெளியாயின.ஒவ்வொருபடமும்கதையாடலிலும்சொல்லும்முறையிலும்நடையிலும்வேறு பட்டதாகவேஇருந்தது. காலத்தின்மாற்றங்களுக்குத்தயாராகாதமனதுடன்பொறியில்அகப்பட்டஎலியைப்போலவாழநேர்ந்தமனிதனைப்பற்றியபடமான'எலிப்பத்தாயம்'அடூரைஉலகசினிமாவின்கவனத்துக்கு உரியவராக்கியது. உண்மையில்உலகசினிமாவுக்குமலையாளத்தின்முதன்மையானபங்களிப்புகளில்சந்தேகமில்லாமல்குறிபிடப்படக்கூடியபடமும் அதுதான்.

அடூரின்நான்காவதுபடமான'முகாமுகம்'உள்ளூரில்கடும்விமர்சனத்துக்கு உள்ளானது.கம்யூனிசம்என்றமானுடப்பேரியக்கம்காலப்போக்கில்எவ்வாறுசெயல்இழந்துபோனதுஎன்றவிமர்சனம்படத்தின்தொனியாகஇருந்தது.கட்சிப்பணியில்வெகுதீவிரமாகஈடுபட்டிருந்தஒருதொண்டர்தலைமறைவாகிறார். சிறிதுகாலத்துக்குப்பின்னர்திரும்பிவரும்அவர்ஓயாமல்தூங்கியேபொழுதைக்கழிக்கிறார்.கம்யூனிசம்மீதானஅவதூறாகஉள்நாட்டில்கருதப்பட்டபடம்கம்யூனிசம்நடைமுறையிருந்தநாடுகளிலும்பிறநாடுகளிலுமுள்ளஇடது சாரியினரால்கம்யூனிசத்துக்குஆதரவானசினிமாவாகக்கருதப்பட்டது'முகாமுகத்'தின்விஷயத்தில்நடந்தவினோதம்.
'அனந்தரம்'அவரதுகலைநேர்த்தியைமுன்வைத்தது.மனிதமனத்தின்ரகசியங்களைதுருவுகிறபடமாகஇருந்தது.'அனந்தரம்'வரைசினிமாவுக்காகபிறரதுகதைகளைஅணுகாமலிருந்தஅடூர்பின்னர்இரண்டுஇலக்கியப்படைப்புகளைமூலபாடமாகவைத்துதிரைக்கதைஉருவாக்கிஇயக்கியபடங்கள்மதில்கள் (மூலம்வைக்கம்முகம்மதுபஷீரின்அதேபெயரிலமைந்தநாவல்)'விதேயன்' (மூலம்சக்கரியாவின்'பாஸ்கரபட்டேலரும்எனதுவாழ்க்கையும்'என்றநாவல்) ஆகியவை. எழுத்துஊடகத்திலிருந்துகாட்சிஊடகத்துக்குஒருபடைப்புமாறும்போதுஏற்படும்சிக்கல்களையும்அடையும்வெற்றிகளையும்இப்படங்கள்முன்வைத்தன. இவ்விருபடங்களுக்குப்பின்னர்அவர்இயக்கிய'கதாபுருஷன்'அவருடையசொந்தக்கதையாகஇருந்தது. அவர்சினிமாவுக்காகஉருவாக்கியகதைஎன்பதுடன்அவரதுசுயசரிதத்தின்சாயலைக்கொண்டதாகவுமிருந்தது.2002 இல்வெளியான'நிழல்குத்து'அடூரின்கலையில்வேறொருபரிமாணத்தைச்சுட்டியது.பொதுவாகவட்டாரத்தன்மையுள்ளதிரைப்படங்களைஉருவாக்கிஅவற்றின்தொனியைஉலகளாவியதாகப்பொருள்படும்படி(Universal) நிலைநிறுத்துவதுஅவரதுஇயல்பாகஇருந்தது. மாறாகநிழல்குத்துசர்வதேசஅரங்கில்விவாதிக்கப்பட்டஒருகதைமையத்தைவட்டாரஅளவில்நிலைநிறுத்திப்பார்க்கமுயற்சிசெய்தது.மரணதண்டனையின்தேவை, அதன்தார்மீகஅடிப்படைஆகியஅம்சங்களைவிசாரணைக்குஉட்படுத்தியதுபடம். கேரளத்தில்முடியாட்சிக்காலத்தின்கடைசிகட்டத்தில்வாழ்ந்தஆராச்சாரின் (மரணதண்டனைவிதிக்கப்பட்டவர்களைத்தூக்கிலிடுபவர்) வாழ்வோடுஇணைத்துஅலசியது.தூக்கிலிடப்படுபவன்நிரபராதியானால்அவனுடையசாவுக்குயார்பொறுப்பு? தூக்குத்தண்டனைவிதித்தவரா?அதைநிறைவேற்றுபவரா? இந்தக்கூர்மையானகேள்விக்குப்பதில்காணும்பொறுப்பைபார்வையாளர்களிடமேவிட்டுவிடுகிறார்இயக்குநர். மிகவும்சமகாலத்தன்மைபொருந்தியஇந்தப்படம்அதன்வடிவத்தில்அடூரின்பழையபடங்களையேஅடியொற்றியிருந்தது.படத்தின்கட்டமைப்பும்வெகுவாகமாற்றமில்லாமல்இருந்தது. அனந்தரம்பட்த்தில்மையப்பாத்திரமானஅஜயன்தன்னுடையவாழ்க்கையைஇரண்டுவிதமானகதைகளாக்ச்சொல்லுகிறான். முகாமுகம்படத்தில்தோழர்ஸ்ரீதரனைப்பற்றிஅவரைஅறிந்தவர்கள்அவரவர்கோணத்தில்சொல்கிறார்கள்.இரண்டுபடங்களிலும்உச்சகட்டம்பார்வையாளனின்கற்பனைக்கும்சிந்தனைக்குமேவிடப்படுகிறது. அதேஉத்திதான்'நிழல்குத்'திலும்பயன்படுத்தப்பட்டிருந்தது.

நவசினிமாகாலப்பகுதியில்எதிர்பார்ப்புக்குரியவராகஇருந்தஇன்னொருமுக்கியமானகே.ஜி.ஜார்ஜ்.புனேஇன்ஸ்டிட்யூட்டில்பட்டம்பெற்றுராமுகாரியத்தின்உதவியாளராக சினிமாவாழ்க்கையைத்தொடங்கியவர். 'ஸ்வப்னாடனம்' (1975) என்றஅவரதுமுதல்படமேஅவரதுபிற்காலப்படங்களின்போக்கைமுன்னறிவித்தது.சினிமாவைவெகுசனக்கலையாக - வெகுசனக்கேளிக்கையாகஅல்ல - அடையாளம்கண்டஇயக்குநர்ஜார்ஜ்என்றுகுறிப்பிடுவதுபொருத்தம்.மலையாளநவசினிமாவில்ஓர்அமைவை(pattern)தோற்றுவித்ததும்  அவர்தாம். 'கோலங்கள்','யவனிக','இரைகள்','பஞ்சவடிபாலம்','லேகயுடெமரணம் - ஒருஃப்ளாஷ்பேக்'ஆகியஅவரதுபடங்களைஇன்றுமதிப்பிடும்போதுஇந்தஅமைவைஉணரமுடிகிறது.ஒருசம்பவம்நிகழ்கிறது.அதைஏன்எங்கேஎப்படிஎதற்குஎன்றகேள்விகளுடன்இயக்குநரும்பார்வையாளனும்பின்தொடர்வதைஜார்ஜ்படங்களின்சுபாவமாகக்காணலாம்.ஒருமர்மக்கதையின்புதிர்அவிழ்வது
போன்றஅமைப்புபார்வையாளனைஈர்த்தது. கூடவேபுதியசினிமாஎன்றால்
அயர்ச்சியூட்டுவதுஎன்றஅச்சுறுத்தலிலிருந்துஅவனைவிடுவித்தது. இத்தகைய பார்வையாளர்விடுதலைதான்கலாபூர்வமானசினிமாவுக்குப்பாராமுகம்காட்டாமலும்அதீதகேளிக்கையில்மூழ்கிவிடாமலும்ஒருகாலகட்டத்தில்மலையாளசினிமாவைரட்சித்தது.அதன்வழிமாற்றம்தான்இடைவழிசினிமாவாகத்தொடர்ந்தது. கே.ஜி.ஜார்ஜ்நாடியதும்உருவாக்கியதும்இடைவழிசினிமாக்களைத்தான். அவற்றிலும்அவரதுபிரத்தியேகத்தன்மையாகக்குறிப்பிடப்படவேண்டியஅம்சம் - பெண்களின்உலகையும்பிரச்சனைகளையும்பற்றிஅவர்படங்களில்காட்டியகரிசனம்.'ஆதாமின்டெவாரியெல்லு', 'இரகள்',போன்றபடங்கள்இந்தவகைக்குஉதாரணங்கள்.

@

எழுபதுஎண்பதுகளில்கலைப்படங்கள்அதிகஎண்ணிக்கையில்உருவாகிப்புகழ்பெற்றிருந்தஅதேசமயத்தில்இடைவழிசினிமாக்களும்உருவாயின .உண்மையில்இந்தவகைப்படங்கள்தாம்மலையாளசினிமாவைஒருதொழில்துறையாகநிறுவின.

எழுத்தாளராகஇருந்துதிரைக்கதையாசிரியராகவும்பின்னர்இயக்குநராகவும்மாறியபத்மராஜன்,ஆர்ட்டைரக்டராகப்பணியாற்றதிரையுலகில்பிரவேசித்துஇயக்குநராகமாறியபரதன்இருவரும்இந்தப்போக்கின்முதன்மையானபிரதிநிதிகள்.பரதனுக்கும்.வி.சசிக்கும்திரைக்கதைகள்எழுதியபத்மராஜன்மலையாளசினிமாவில்ஒருபுதியதடத்தைத்திறந்துவிட்டார்.காமம், அதுசார்ந்தவன்முறைஇவற்றைமையமாகக்கொண்டஅவரதுகதைகள்சினிமாத்திரையில்பெரும்வெற்றிபெற்றன.பரதனுக்காகஅவர்எழுதிய'ரதிநிர்வேத'மும்சசிக்காகஎழுதிய'இதாஇவிடெவரெ'யும்துலக்கமானஉதாரணங்கள். இந்தவன்முறைபின்னர்அரசியல்பின்னணிசார்ந்தும்இந்தக்காமம்போர்னோசினிமாக் களாகவும்வடிவம்மாறின.

இடைவழிசினிமாக்களின்முதன்மையானஇயல்புஅவைதேர்ந்தஒருங்கிணைப் பாளர்களைஉருவாக்கின்என்பதுதான்.இயக்குநர்என்பவர்ஒருபடைப்பாளிஎன்றகருத்தைஅவைகலைத்தன.ஒருகதையாடலைநேர்த்தியாகக்கொண்டுசெல்லக்கூடியநபர்மட்டுமேஎன்றுஉறுதிப்படுத்தின.மோகன், சிபிமலையில்,சத்தியன்அந்திக்காடு, ஃபாசில், லெனின்ராஜேந்திரன்போன்றஇயக்குநர்களைஇந்தவகையைச்சேர்ந்தவர்களாகவேகருதவேண்டும். சினிமாவில்கலை, வணிகம்என்றஇருபிரிவுகள்அழிந்தகாலகட்டம்இது. மிகச்சிறந்தநடிப்பும்தொழில்நுட்பமுன்னேற்றமும்உருவாகஇந்தவேற்றுமையின்மைஉதவியது. தொண்ணூறு களில்இந்தவேகமும்மட்டுப்பட்டுமலையாளசினிமாவழிமறந்ததிகைப்பில்ஆழ்ந்தது.




கலைப்படங்களின்நடைமுறையாளர்களாகப்போற்றப்பட்டிருந்தபலரும்குழப்பமானசூழ்நிலைக்குத்தள்ளப்பட்டார்கள்.தன்னளவில்நேர்த்தியானபடங்களைஎடுத்தகே.ஜி.ஜார்ஜ்'இலவங்கோடுதேசம்'போன்றகாலத்துக்குப்பொருந்தாதபடங்களில்கவனத்தைச்சிதறவிட்டனர்.அந்தத்தருணத்திலும்சினிமாபற்றியதிடமானஅணுகுமுறையுடன்செயல்பட்டவராகஇருந்தவர்அடூர்கோபாலகிருஷ்ணன்மட்டுமே.1988 இல்'பிறவி'என்றபடத்துடன்அறிமுகமானஷாஜிஎன்,கருண்தொடர்ந்துஇயங்கி'ஸ்வம்','வானப்ரஸ்தம்'போன்றபடங்களைத்தந்தார்.ஆனால்அவைவெளிநாட்டுத்திரைப்படவிழாக்களில்பெரும்வெற்றிபெற்றனவேதவிரஉள்ளூரில்சீந்தப்படாமல்போயின.

இருபத்தியோராம்நூற்றாண்டைநெருங்குகிறவேளையில்அதுவரைமலையாளத்திரைப்படத்துறையில்இருந்துவந்தஇடைவழிமறைந்துகேளிக்கைநிரம்பியசரக்குகளின்சந்தடிவிற்பனைஅதிகரித்தது. அதிரடியானபடங்கள்அதில்சாதியப்பெருமையைநிலைநிறுத்தப்போராடுகிறகதாநாயகன் (நரசிம்ஹம்மோகன்லால்ஷாஜிகைலாஸ்அணியின்படம்),நகைச்சுவைக்கேளிக்கையானசந்தர்ப்பங்கள்,எதார்த்தத்துக்குசம்பந்தமில்லாதஇடங்கள், (தென்காசிப்பட்டணம்  போன்றவை) என்றுசந்தைஉஷாரானது. இந்தவகைத்திரைப்படங்களும்வீழ்ச்சி
ய்டையத்தொடங்கியஇரண்டாயிரமாவதுஆண்டுகளின்தொடக்கத்தில்போர்னோ சினிமாக்கள்தாம்மலையாளத்திரையுலகைக்காப்பாறினஎன்பதுஒருகலாச்சாரமுரண்.பெரும்கதாநாயகர்களோதிறமையானஇயக்குநர்களோசரிந்துகொண்டிருந்ததிரையுலகைமுட்டுக்கொடுத்துநிறுத்தமுடியாதநிலையில்ஷகீலாஎன்றநடிகைதன்னுடையசரீரத்தால்தாங்கிநிறுத்தினார்என்பதுமலையாளத்திரைப்படவரலாற்றில்ஒருசம்பவமாகவும்இடம்பெற்றிருக்கிறது.



இந்தநூற்றாண்டின்தொடக்கவருடங்களில்சிலஇளம்இயக்குநர்கள்அறிமுகமாகிமலையாளசினிமாவைவேறுதிசைகளில்கொண்டுசெல்லக்கூடியபடங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.தொண்ணூறுகளில்இயக்குநராகஅறிமுகமானடி.வி.சந்திரன்ஒருபுதியசினிமாப்பாணியைஉருவாக்கினார். ஆலிசின்டெஅன்வேஷணம், பொந்தன்மாடா,சூசன்னா,டானி,பாடம்ஒந்நுஒருவிலாபம்போன்றபடங்கள்புதியகாட்சிமொழியைஉருவாக்கமுயற்சிசெய்தவை. ராஜீவ்விஜயராகவனின்'மார்க்கம்'இன்னொருகுறிப்பிடத்தகுந்தபடம்.எனினும்இந்தப்படங்களெல்லாம்பொருட்படுத்தக்கூடியசலனங்களைபார்வையாளர்மத்தியில்ஏற்படுத்தஇயலாமற்போயின.விருதுகள்பெறுவதற் கானபடங்கள்என்றஉதாசீனமானஅபிப்பிராயத்தையேமுன்வைத்தன.
சமீபகாலத்தில்வெளியானசிலபடங்கள்கலைப்படங்கள்என்றுதம்பட்டம்அடித்துக்கொள்ளாமல்வாழ்க்கையுடன்நெருக்கமானஉறவைக்காட்டுகின்றன. பிளஸ்ஸிஇயக்கிய'காழ்ச்ச்'தன்மாத்ர', கமல்இயக்கிய'பெருமழக்காலம்'ஆகியவைநேர்த்தியானபடங்கள்என்றஅளவில்வரவேற்புப்பெற்றிருப்பதுஎழுபத்தைந்துவயதுகடந்தமலையாளசினிமாவின்எதிர்காலத்தைப்பற்றிஅவநம்பிக்கைகொள்ளாமலிருக்கஉதவுகின்றன.
@






















Viewing all articles
Browse latest Browse all 181

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>