மலையாளத்திரைப்படங்களுக்குசந்தைமதிப்புக்குறைவுஎன்றகருத்தை
1951 இல்வெளியான'ஜீவிதநௌகா' (வாழ்க்கைப்படகு) திருத்தியது.
மலையாளமொழியில்பெரும்வெற்றிபெற்றபடம்.திருவனந்தபுரம்நகரத்தில் மட்டும்இருநூற்றுஎண்பத்தெட்டுநாட்கள்ஓடியபடம்.திக்குரிச்சிசுகுமாரன் நாயர்என்றநடிகரைநட்சத்திரமாக்கியபடம்ஆகியபெருமைகள்இந்தப் படத்துக்குஉண்டு.ஒருகூட்டுக்குடும்பத்தில்நடக்கும்மோதலைமையமாகக் கொண்டவங்காளமொழிக்கதையொன்றைத்தழுவிதிரைக் கதைஉருவாக்கப்பட்டது உணர்ச்சிகரமானகட்டங்கள்,இனியபாடல்கள்என்றுவெற்றிக்குத்தோதான சூத்திரங்களைக்கொண்டிருந்ததுபடம்.இதேசூத்திரங்களைஜீவிதநௌகாவுக்கு முன்புவெளியானசிலபடங்களும்பயன்படுத்தியிருந்தன.'வெள்ளிநட்சத்திரம்', 'நிர்மலா'ஆகியபடங்கள்இதே பாணியில்தான்அமைந்திருந்தன. ஆனால்சூத்திரம்பக்குவப் பட்டிருந்ததுஜீவிதநௌகாவில்தான்.வேம்புஎன்றதமிழர்இயக்கியிருந்தார்.
ஜீவித நௌகா
வெகுசனரசனைக்குப்பொருந்தும்எல்லாச்சரக்குகளும்வாழ்க்கைப்படகில்
இருந்தன.கதைக்குள்கதைஎன்றவிநோதமும்இதில்தொடங்கியது.குடும்பக்
கதையோட்டத்தில்சுவாரசியத்துக்காகமேரிமக்தலேனாவின்கதையும்செருகப்பட்டிருந்தது.தமிழ், தெலுங்குசினிமாவிலிருந்துகடன்வாங்கியஉபாயம்இது. இதக்கிளைக்கதைமூலம்திருவிதாங்கூர்சகோதரிகள்என்றுபிரசித்திபெற்ற பத்மினிசகோதரிகள்அறிமுகமானார்கள்.
'ஜீவிதநௌகா'இரண்டுபோக்குகளைமலையாளசினிமாவுக்குப்பங்களித்தது. வெகுசனத்திரைப்படத்தின்அடிப்படைகளைக்கட்டமைத்தது - ஒன்று.சினிமாவை முதன்மையானநடிகனின்சாதனமாக்கியது - இரண்டு. இந்தப்பின்னணியிலிருந்தே மலையாளசினிமாவின்நட்சத்திரங்களானசத்யனும்பிரேம்நசீரும்உருவானார்கள்.
திரைப்படம்என்பதுஇன்னொருகலைஎதார்த்தம், அந்தக்கலையைவடிவமைக்க இயக்குநர்என்றபிரகிருதிதேவைஎன்றதிரைக்கலையின்ஆரம்பபாடங்களை எடுத்துச்சொன்ன'நீலக்குயில்' 1954 இல் வெளியானது. அதற்குள்'ஜீவிதநௌகா' உபயத்தால்மலையாளசினிமாவின்தயாரிப்புஎண்ணிக்கைஅதிகரித்தது.இரண்டு படப்பிடிப்புத்தளங்கள் - திருவனந்தபுரத்தில்மெரிலாண்டும்ஆலப்புழையில் உதயாவும்- உருவாயின.மலையாளப்படங்கள்சந்தைமதிப்புப்பெற்றன. திரைப்படத் தயாரிப்புபல்லாயிரம்பேருக்குவாழ்வளிக்கும்தொழில்துறையானது.
கேரளவாழ்க்கையுடன்தொடர்புகொண்டமுதல்படமானநீலக்குயிலின்கதையை பிரபலஎழுத்தாளர்உரூபுஎன்றபி.சி.குட்டிகிருஷ்ணன்எழுதியிருந்தார்.சமூகத்தில் நிலவியசாதிப்பிரச்சனையைக்கருவாகக் கொண்டகதை. திரைக்கதையில்மிகை நாடகத்தன்மையுள்ளகாட்சிகள்அதிகமிருந்தன. ஆனால்இந்தபலவீனங்களை மீறிஅசல்மலையாளசினிமாஎன்றுசிறப்பிக்கத்தகுதியானசாதகமான அம்சங்கள்இதிலிருந்தன.
நீலக்குயில்
மலையாளிஜீவிதத்தின்வெம்மையும் குளிருமுள்ளகதை. அதைநம்பகமான தாக்கும் வெளிப்புறப்படப்பிடிப்பு.மலையாளத்தனித்துவமுள்ள பாடல்கள். இந்தக்கூறுகள் அதுவரைமலையாளத்திரையுலகம்காணாதது. தமிழ்நாடகங்களின்சாயலில் ஒட்டவைத்தகதைநிகழ்ச்சிகள். தமிழ், இந்திப்பாடல்களின்நகலெடுப்பானஇசை, பாடல்கள்என்றிருந்தபொதுப்போக்கைநீலக்குயில்மாற்றியது. இந்தமாற்றத்துக்குக் காரணமாகஇருந்தவர்கள்இயக்குநர்ராமுகாரியத், திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமாகிநீலக்குயில்மூலம்இயக்குநரானகவிஞர் பி.பாஸ்கரன், ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் ஆகியோர். சினிமாஒருசீரிய கலைஎன்றநம்பிக்கைதான்மூவரையும் இணைத்தகண்ணி.
கம்யூனிஸ்ட்கட்சியின்கலையமைப்பானஇப்டாவின்கேரளப்பிரிவில்ஈடு பட்டிருந்தவர். பாஸ்கரன்கட்சியின் புரட்சிக் கவிஞராகப் புகழ் பெற்றிருந்தவர். சின்ன அளவுக்குஇடதுசாரிஅனுதாபியாகஇருந்தவின்சென்ட்ஜெமினிஸ்டூடியோவில் உதவிஒளிப்பதிவாளராகப்பணியாற்றியவர்.அப்போதுவானொலிநிலையத்தில்நிகழ்ச்சி தயாரிப்பாளராகஇருந்தவர் உரூபு. அங்கேயேஇசைக்கலைஞராகப்பணிபுரிந்து வந்தவர் கே.ராகவன். அன்றுஇவர்களுக்கிருந்தசமுதாயப்பார்வைதான்வித்தியாசமானசினிமாவைஉருவாக்கஉந்துதலாகஇருந்தது. நடப்புவாழ்க்கையிலிருந்து தேர்ந்தெடுத்தகதை,கேரளத்தின்நாட்டார்பாடல்களைஅடியொற்றியஇசை, ஸ்டூடியோவுக்கு வெளியிலானபடப்பிடிப்பு என்றுமாற்றுசினிமாவுக் கான ஆரம்பஅடையாளங்களைக்கொண்டிருந்ததுநீலக்குயில்.மலையாளசினிமாவுக்கு தேசீயஅரங்கில்அறிமுகம்ஏற்படுத்தியதும்முதலாவதுதேசீயவிருது பெற்றதும் நீலக்குயில்தான்.
நீலக்குயில்தந்தஉத்வேகம்காரணமாகஇலக்கியவாதிகள்பலரும்சினிமா
முயற்சிகளில்ஈடுபட்டனர். பிரபலமானநாடகங்களும்சிறுகதைகளும்நாவல்களும் சிலகவிதைகளும்கூடதிரைவடிவம்பெற்றன. இலக்கியச்சார்புமலையாள சினிமாவுக்குபலத்தைத்தந்ததுபோலவேபலவீன மடையவும்காரணமாகஇருந்தது. திரைப்படம்தனித்தஒருகலைஎன்றுஇனங்காணஎழுபதுகள்வரையிலான கட்டம்வரைகாத்திருக்கநேர்ந்தது.
இலக்கியத்தோடுநெருக்கமோசினிமாதொழில்நுட்பத்தில்முன்அனுபவம்
எதுவுமில்லாதஇளைஞர்குழுவொன்றுதான்மலையாளசினிமாவைதனிப் பட்ட கலையாகஉணர்ந்தது; 'நியூஸ்பேப்பர்பாய்'என்றபடம்அதைஉணர்த் தியது.
1955 இல்வெளிவந்த'நியூஸ்பேப்பர்பாய்'அந்தக்காலஅளவில்சினிமாவை
மாற்றுக்கலையாகக்கருதியிருந்தவர்களிடம்பெரும்பாதிப்பைஉருவாக்கிய
விட்டோரியாடிசிக்காவின்'பைசைக்கிள்தீவ்'ஸைமுன்மாதிரியாகக்கொண்டிருந்தது. டிசிக்காவின்படத்தைப்போன்றேஇதிலும்பிஞ்சுப்பருவத் திலேயே வாழ்க்கையின்துக்கத்தையும்சுமையையும்புரிந்துகொள்ளும்சிறுவனின் அனுபவம்தான்கதைப்பொருளாகஅமைந்தது.
ஓர்அச்சகத்தில்பணியாற்றும்தொழிலாளி.அவனுடையவறுமையான
குடும்பம். வறுமைகாரணமாகஅந்தவீட்டுப்பிள்ளைகள்இருவரும்படிப்பை
நிறுத்தவேண்டியதாகிறது. அதீததரித்திரமும்நோயும்பிடுங்கியதில்அப்பா
இறக்கிறார். மூத்தபிள்ளையானஅப்புவேலைதேடிமதராஸ்போகிறான். நகரத்திலும்வேலைகிடைக்காமல்ஊருக்குத்திரும்பி வந்து பத்திரிகை போடும்பையனாகிறான்.
நியூஸ் பேப்பர் பாய்
ராம்தாஸ்
நாடகத்தனமானதிருப்பமோமிகையுணர்வானநடிப்போஇல்லாதஇந்தப்
படத்தைமலையாளத்தின்கலைப்படத்துக்கானஆரம்பமாகச்சொல்லலாம்.
கதையடிப்படையிலானஇந்தகுணத்துடன்சினிமாவைகாட்சிகளின்கலை
என்றுநிறுவுவதற்கும்'நியூஸ்பேப்பர்பாயை'உதாரணமாகச்சொல்லலாம்.
படத்தின்ஒருகாட்சியைக்குறிப்பாகச்சொல்வதுஅதன்காட்சித்தன்மையைச்
சுட்டிக்காட்டும். அப்பாவின்மரணத்துக்குப்பின்னர்அப்புதம்பியுடன்
வீட்டுக்குள்நடக்கிறான். காமிராஇருவரையும்நகர்ந்துபின்தொடருகிறது.
அதேசட்டத்துக்குள்காலியாக்கிடக்கும்கட்டிலும்தெரிகிறது. அடுத்தஷாட்டில் அம்மாவும்தங்கையும்உட்கார்ந்திருக்கும்காட்சிநோக்கிநகர்கிரதுகாமிரா. அதுமுடியுமிடத்தில்அப்புமுழங்காலில்முகம்வைத்துஉட்கார்ந் திருக்கிறான். அவன்முகத்திலிருந்துகாமிராபின்வாங்குகிறது.அப்பாவிட்டுப்போன குடும்பத்தின்பாதுகாவலன்அவன்என்பதைக்காட்சிப்படிமமாகச்சொல்ல ராமதாஸ்எடுத்துக்கொண்டமுயற்சிஅது. அவரதுநோக்கம்பார்வையாளர் மத்தியில்சரியாகவேபுரிந்துகொள்ளப்பட்டது. சினிமாபிம்பங்களால்பேசும் மொழிஎன்பதைராமதாஸ்விளங்கிக்கொண்டிருந்தார்என்பதற்குபடத்தின் இந்தக்காட்சிஆதாரம்.
காட்சியின்கலையாகமலையாளசினிமாவைஒருங்கிணைத்தவர்ராமு
காரியத்.'நீலக்குயில்'படத்தில்பி.பாஸ்கரனுடன்இணைந்துபணியாற்றிய
ராமுகாரியத் 1957 இல்மின்னாமினுங்கு (மின்மினி) படத்தைத்தனித்து
இயக்கினார். மனைவியைஇழந்தடாக்டர்தன்பிள்ளைகளின்பொருட்டு
மறுமணம்செய்துகொள்ளாமல்வாழ்கிறார்.வீட்டுப்பணிக்காகவரும்ஒரு
பெண் அவருக்கும் பிள்ளைகளுக்கும் பிரியத்துக்குரியவளாகிறாள்.அதைத்
தொடர்ந்துகிளம்பும்புரளிகள்காரணமாகவேலைக்காரிவீட்டைவிட்டு
வெளியேற்றப்படுவதும்அவளதுநல்லமனசையும்அன்பையும்
அடையாளம் கண்டுகொள்கிறகுடும்பத்தினர்அவளைத்தேடிக்கண்டு
பிடிப்பதும்டாக்டர்அவளைமணந்துகொள்வதுமான சாதாரணமான
கதையைசினிமாவாக்கினார்காரியத். 'நீலக்குயில்'படத்தில்அவர்வெளிப்
படுத்தியதிரைப்படமொழிக்குஎதிராகஇருந்ததுமின்னாமினுங்கு. அந்தப்
படத்தின்மூலம்மலையாளத்திரையுலகம்பெற்றஒரேஇலாபம்-படத்துக்கு
இசையமைத்தபுதியவரானஎம்.எஸ்.பாபுராஜ்.
தமிழ், ஹிந்திஇசைக்கோலங்கள்ஆக்கிரமித்திருந்தமலையாளத்திரை
இசைக்குகேரளத்தின்மாப்பிள்ளைப்பாட்டின்துடிப்பையும்கஜல்சங்கீதத் தின்கனவையும்பாபுராஜ்பங்களித்தார்.
ராமு காரியத்
பி. பாஸ்கரன்
பாபுராஜ்
ராமுகாரியத்வெறும்இயக்குநராகமட்டும்சினிமாவில்செயல்படவில்லை.
அவரேஒருநடிகராகஅறிமுகமானவர்தாம். இலக்கியத்திலும்அக்கறை
கொண்டிருந்தார்.அவர்திரைப்படமாக்கவிரும்பியவைஅனைத்தும்
மலையாளிகளால்வெகுவாகவரவேற்கப்பட்டநாவல்கள்அல்லதுநாடகங்கள்.
'மின்னாமினுங்கு'க்குப்பிறகுஅவர்படமாக்கிய'முடியனாயபுத்ரன்'(1961)
மூடுபடம்(1963) ஆகியவையும்பிரபலமானஇலக்கியப்படைப்புக்களே.
முன்னரேபிரசித்தமானபடைப்பைதிரையாக்கம்செய்வதில்ராமுகாரியத்
கொண்டிருந்ததிறமைக்குஅழுத்தமானசான்றுஅவர்திரைக்கதைஎழுதி
இயக்கிய'செம்மீன்'(1966).
மலையாளசினிமாவுக்குதேசீயசர்வதேசஅங்கீகாரத்தைப்பெற்றுத்தந்த
படம்.தகழிசிவசங்கரப்பிள்ளையின்நாவலுக்குவாசகர்மத்தியில்நிலவிய
இலக்கியப்புகழைவெகுசனங்களின்இடையில்பரவலாக்கியதுசினிமா.
செம்மீனைநாவலாகவாசித்திராதவர்கள்கூடதிரைப்படத்தால்கவரப் பட்டனர். செம்மீனுக்குக்கிடைத்தவரவேற்பும்வெற்றியும்மொத்ததிரையுலகின் பார்வையையும்மலையாளப்படவுலகம்நோக்கித்திருப்பின.
ஒருதிரைப்படத்தின்இயக்குநர்என்பவர்யார்? படைப்பாளியா?ஒருங்கிணைப்
பாளரா? என்றபெரியகேள்வியைமலையாளத்திரையுலகம்ராமுகாரியத்தை முன்வைத்துஎழுப்பிக்கொண்டது.அதுவரைமலையாளப்படங்களைஇயக்கிய பலரும்ஒருங்கிணைப்பாளர்கள்மட்டுமே.அவர்களில்தன்னிகரற்றஒருங்கிகிணைப்பாளராகஇருந்தவர்ராமுகாரியத்என்பதைசெம்மீன்நிரூபித்தது.
திரைப்படத்தொழில்நுட்பத்துறைகளில்தேர்ந்தபலரையும்ராமுகாரியத்
'செம்மீன்; உருவாக்கத்தில்ஈடுபடுத்தினார்.பிரபலமானகாதல்கதை.அதன்
காட்சிப்படிமங்களுக்குஅழுத்தம்கொடுத்துஅவரேஅமைத்ததிரைக்கதை.
புகழ்பெற்றநாடகாசிரியரானஎஸ்.எல்.புரம்சதானந்தனின்உரையாடல்.
மார்க்கஸ்பார்ட்லேயின்ஒளிப்பதிவு.ரிஷிகேஷ்முகர்ஜியின்படத்தொகுப்பு.
சலீல்சௌத்திரியின்இசை.அதுவரைமலையாளப்படங்களில் கவனத்துக் குரிய நடிப்பைவெளிப்படுத்தியிருந்தகலைஞர்களின்பங்கேற்பு. இந்தஅடிப்படை அம்சங்களின்நேர்த்தியானகலவையாகஅமைந்தது செம்மீன். இந்தக்கலவை நேர்த்தியைபக்குவமாகக்கையாள்வதேஇயக்குநராகராமுகாரியத்செய்த பணி.
செம்மீன்
தகழி
இப்படிச்சொல்வதுஅவரதுபங்களிப்பைக்குறைவுபடுத்துவதற்கல்ல.பலர்
கூடிச்செயல்படும்திரைப்படத்தயாரிப்பில்இதற்குவலுவானதலைமைக்
குணம்அவசியம்என்பதும்குறிப்பிடத்தக்கது.அதுகாரியத்திடம்இருந்தது.
இல்லையெனில்பத்தொன்பதுவயதுமட்டுமேநிரம்பியஅறிமுகத்தயாரிப்பா
ளரானபாபு, ராமுகாரியத்தைமட்டும்நம்பிபடமெடுக்கமுன்வந்திருக்க
முடியாது.
செம்மீன்மலையாளசினிமாவுக்குப்பலபாடங்களைக்கற்றுக்கொடுத்தது.
தொழில்நுட்பமேன்மைஇந்தஅறிவியல்ஊடகத்துக்குஎவ்வளவுமுக்கியம்
என்பதைஅழுத்தமாகச்சொன்னது.ஒருங்கிணைப்பின்முழுமைமூலமும்
ஒருநல்லபடத்தைத்தரமுடியும்என்றுகற்பித்தது. (ஹரிஹரன்,ஐ.வி.சசி,
பரதன்,சத்தியன்அந்திக்காடு,சிபிமலையில்,கமல்போன்றபிற்காலஇயக்குநர்
வரிசையைஇந்தஅடிப்படையிலேயேமதிப்பிடமுடியுமென்றுதோன்றுகிறது).
தகழியின்நாவலில்கடலோரமீனவவாழ்க்கையில்உருவாகிதோற்றுப் போகும் ஒருகாதலின்துக்கம்சித்தரிக்கப்பட்டிருந்தது.கடலோடுபோராடும்மீனவனின் உயிருக்கானஉத்தரவாதம்அவனுடையமனைவியின்கற்பில்இருக்கிறது என்றநம்பிக்கைஇழையோடியிருந்தது. மனிதனின்பணப் பேராசையும் வஞ்சனையும்கதையைமுன்நகர்த்தும்உணர்ச்சிகளாகஇருந்தன.இவை அனைத்தையும்தனதுதிரைக்கதையில்ராமுகாரியத்தால்கொண்டுவர முடிந்திருந்தது.ஓர்ஒருங்கிணைப்பாளரின்கடினமானமுயற்சியின்விளைவு அது. ஓர்இயக்குநராக, கலைஞராகராமுகாரியத்தீவிரமாகவெளிப்பட்டிருக்க வேண்டியஇடம்கடல். அதன்இயல்புகளும்அத்னோடுமனிதவாழ்வு கொள்ளும்பிணைப்பும்அவரதுகவனத்தில்பதியவில்லை.நாவலில்கடலும் ஒருகதாபாத்திரம். திரைப்படத்தில்அதுவெறும்பின்னணி. (அகிராகுரோசாவாவின்'ராஷோமா'னில்தொடர்ந்துபெய்யும்மழைவெறும் பின்னணியல்லஎன்றுசுட்டிக்காட்டுவதன்மூலம்இந்தவிவாதத்தைத் தெளிவுபடுத்தலாம்).
வேறுஎந்தக்கலைவடிவையும்விடபின்னணியின்உளவியலைவெளிப்
படுத்தும்சாத்தியம்சினிமாவில்அதிகம்என்பதனாலேயேராமுகாரியத்
இந்தஆதங்கத்துக்குஅல்லதுகுறைக்குப்பாத்திரமாகிறார்.செம்மீனுக்கு
பிறகுசிலஆண்டுகள்இடைவெளிவிட்டுஅவர்எடுத்த'நெல்லு' (1974)
படமும்இதேகுறையைக்கொண்டது.வயநாட்டின்மலைக்காடுகளில்வாழும்
ஆதிவாசிகளின்வாழ்க்கைஎன்றபின்னணியேஅவரைக்கவர்ந்தது.அந்தப்
பின்புலத்தின்இயல்புஅவரால்பொருட்படுத்தப்படவேஇல்லை.
எனினும்மலையாளசினிமாவுக்குதேசியஅளவிலும்உலகஅரங்கிலும்
இடம்பெற்றுத்தந்தவர்என்றவகையில்ராமுகாரியத்மறக்கப்படக்கூடாதவர். சினிமாஎன்றஊடகத்தின்மீதுஅவர்கொண்டிருந்தமாளாக்காதல்ஒரு முன்னுதாரணமென்பதுபோலவேஅவரதுதிரைப்படத்தேர்வுகளும்பின்பற்றத் தகுதியானவை.
காரியத்பெரும்பாலும்இலக்கியவடிவங்களில்அறிமுகமான படைப்பு களையே சினிமாவுக்குமூலப்பொருளாகக்கண்டார்.ஆனால்அவற்றில்ஒன்றுக்கொன்று வித்தியாசமானகளங்கள்பின்னணியாகஅமையும்படிஇருந்தனஅவரது தேர்வுகள்.அவரதுசமகாலசினிமாவுலகச்செயல் பாடுகளைமுன்னிருத்திப் பார்க்கையில்இதுதுணிச்சலானநடவடிக்கை. அப்போதுபிரசித்தமானபடப்பிடிப்பு நிலையங்களாகஇருந்தவைஒரேமாதிரியானகதையமைப்புகள்கொண்ட படங்களைஉற்பத்திசெய்துஅரங்கைநிறைத்தகட்டத்தில்காரியத்தின்துணிவுதான் சினிமாவின்கலைப்பாதுகாப்புக்குஅரணாகஇருந்தது.மெரிலாண்ட்ஸ்டூடியோ புராணக் கதைகளையும் (குமாரசம்பவம்,சுவாமிஅய்யப்பன்) கானகக்கதைகளை
யும்(யானைவளர்த்தவானம்பாடி) குத்தகைய்யெடுத்திருந்தது.உதயாஸ்டூடியோ வடக்கன்பாட்டில்இடம்பெறும்வீரசாகசக்கதைகளை (தச்சோளிஉதயணன், தச்சோளிஅம்பு) போன்றகதைகளைபடங்களைத்தயாரித்துவெளியிட்டது. இவற்றுக்கிடையில்பரீட்சார்த்தமானதேர்வுகள்மூலம்காரியத்தனதுஇருப்பை நிறுவினார். செம்மீன்கடலையும் நெல்லுமலைக் காட்டையும்த்வீபு(1977) தீவில்வாழும்மக்களின்வாழ்க்கையையும்பின்புலமாகக்கொண்டிருந்தன.
எழுபதுகளிலும்எண்பதுகளிலும்மலையாளசினிமாவில்நிகழ்ந்தமாற்றத்துக்கு ராமுகாரியத்தின்செயல்பாடுகள்தூண்டுதலாகஇருந்தனஎன்றுகுறிப்பிடுவது பிழையாகாது. திரைப்படக்கலையை ஒருங்கிணைப் பாளரின்ஊடகம்என்றும் படைப்பாளியின்ஊடகம்என்றும்பாகுபடுத்தராமுகாரியத்தைஆதாரப் புள்ளியாகவும்கருதலாம்.
காரியத்தின்சகஇயக்குநராக'நீலக்குயில்'படத்தில்பணியாற்றியகவிஞர்.
பி.பாஸ்கரன்மலையாளத்தில்கலைத்தன்மையுள்ளசிலபடங்களைஉருவாக்கினார். 'ராரிச்சன்எந்நபௌரன்'(1956) என்றபாஸ்கரனின்திரைப்படம்மலையாளத்தில் இன்றளவும்வெளியானபடங்களில்சிறந்தஒன்று. 'நியூஸ்பேப்பர்பாய்'போல இதிலும்மையப்பாத்திரம்சிறுவன்.அநாதையானராரிச்சன்தனக்குஆதரவு காட்டியகுடும்பத்துக்காகதிருட்டுநடத்துவதும்அகப்பட்டுசிறுவர்சீர்திருத்தப் பள்ளிக்குஅனுப்பப்படுவதும்தான்கதையின்சரடு.ஆனால்எளிமையும் இயல்புமாககாட்சிசார்ந்துஇந்தப்படத்தைஉருவாக்கியிருந்தார்பாஸ்கரன். சிலகுறிப்பிடத்தக்கபடங்களையும்அவர்இயக்கினார்.எம்.டி.வாசுதேவன்நாயர் முதன்முதலாகத்திரைக்கதைஎழுதிய'முறைப்பெண்'(1965) அவற்றில்ஒன்று. எம்.டி.யின்புகழ்பெற்றசிறுகதையான'இருட்டின்ஆத்மா'வைமூலமாகக் கொண்டுஎம்.டி.உருவாக்கியதிரைக் கதையை1967 இல்பாஸ்கரன்படமாக்கினார்.
மலையாளிகள்தங்களதுஞாபகத்தில்பத்திரப்படுத்தியிருந்தஅந்தக்கதையை
சினிமாவடிவத்திலும்மதிப்புப்பெறஉதவியதுஎம்.டியின்திரைக்கதைதான்
என்றஉணர்வுஇன்றுபடம்பார்க்கும்போதுமிஞ்சுகிறது. எழுபதுகளில்பாஸ்கரனின்பங்களிப்புஅசட்டுநகைச்சுவைப்படங்களும் அதன்பின்னர்வந்தமொழிமாற்றுக்கதைப்படங்களும்தாம்.
மலையாளசினிமாவுக்குபெரும்ரசிகர்வட்டத்தைஉருவாக்கியமற்றொரு
இயக்குநர்கே.எஸ்.சேதுமாதவன். 'ஞானசௌந்தரி'படத்தில்பணியாற்றியஅவர் தமிழ்சினிமாவின்வெகுசனபதார்த்தங்களையேபெரிதும்சார்ந்தி ருந்தார்.ஆனால் இந்தச்சார்புகுறுகியஆயுள்மட்டுமே கொண்டிருந்தது. பின்னர்அவர் சமகாலஇலக்கியங்களில்தனதுதிரைக்கதைகளைக்கண்டடைந்தார்.இலக்கிய வடிவங்களைஆதாரமாகக்கொண்டுஅதிகஎன்ணிக்கையில்படங்களை உருவாக்கியவரும்அவராகவேஇருந்தார். பி.கேசவதேவின்'ஓடையில்நிந்நு' படம்சேதுமாதவனின்குறிப்பிடத்தகுந்தபடம். அந்தப்படத்தின்காட்சித் தன்மையுள்ளபடிமங்களை'தாகம்'என்றபடத்தைத்தவிரபிறபடங்களில் உருவாக்கமுடியாமற்போயிற்று 'அரைநாழிகைநேரம்'என்றபாரபுறத்தின் நாவலுக்குஅவர்வழங்கியசினிமாவடிவம்இலக்கியத்துக்குநியாயமானதாக இருந்தது. சினிமாஎன்றஊடகத்தின்இலக்கணத்தைதனக்குச்சாதகமாக வளைத்துகொள்ளவும்செய்திருந்தது.
கே.எஸ். சேதுமாதவன்
சேதுமாதவன்மலையாளத்திரையுலகுக்குஅளித்தகொடைஎன்றுசில
விஷயங்களைக்குறிப்பிடலாம்.சமூகஎதார்த்தமுள்ளபார்வையைமுன் வைத்தது, நேர்த்தியானகதையாடலைவடிவமைத்தது.இலக்கியஉறவைசினிமாவில் தொடர்ந்துபேணியதுஎன்பவைபிற்காலசினிமாவைவலுப் படுத்தவும் புதியகாட்சிமொழியைஉருவாக்கவும்பெருமளவுக்குஉதவின. சேதுமாதவனும் பின்னாட்களில்தனதுஅதுவரையானநேர்த்தியையும்எதார்த்தஉணர்வையும் தோற்கடிக்கச்செய்யும்படங்களையேஎடுத்தார். அவற்றுள்கொஞ்சமாவது திரைப்பட இயல்புள்ளபடமாகஇருந்தது 1981 இல்வெளிவந்த'ஓப்போள்' மட்டுமே.
எழுபதுகளில்உலகசினிமாவைப்பற்றியபுரிதல்இந்தியத்திரையுலகை
அடியோடுமாற்றமுற்பட்டது.திரைப்படச்ச்ங்கங்கள்மூலம்ஒருபுதியவிழிப்பு ஏற்பட்டது.உலகசினிமாவின்சிறந்தபடங்களைக்காணநேர்ந்தபார்வையாளன் தனதுமொழியிலும்கலாச்சாரத்திலும்வாழ்க்கைஅனுபவத்திலும்கருக்கொண்டு உருவாகும்காட்சியனுபவத்துக்குத்தயாராகஇருந்தான். மலையாளத்தில்அந்தத் திசையில்சிந்தித்த இயக்குநர் பி. என்.மேனோன். எம்.டி.வாசுதேவன்நாயரின் திரைக்கதையில்அவர்எடுத்த'ஓளவும்தீரமும்' (1970) படம்சினிமாஎன்பது காட்சிக்கலைஎன்றுஅழுத்தமாகநிறுவியது.
பி.என்.மேனோனும் எம்.டி. வாசுதேவன் நாயரும்