Quantcast
Channel: வாழ்நிலம்
Viewing all articles
Browse latest Browse all 181

மூன்று நூல்கள்

$
0
0
2017சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகவிருக்கும் - வெளியாகி இருக்கும் - மூன்று புத்தகங்களுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. மூன்று நூல்களும் ஏதோ ஒரு வகையில் மனதுக்கு மிக நெருக்கமானவை. மூன்றும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை.



மலா ராமசாமியின் 'நான் தைலாம்பாள்'.  சுந்தர ராமசாமியின் மனைவி கமலா - எனக்குக் கமலாம்மா - தன்னுடைய அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கும் நூல் . அம்மாவின் வாழ்க்கை அனுபவங்களை மகள் கமலா அம்மாவின் குரலிலேயே பதிவு செய்திருக்கிறார்.

                                                           காலச்சுவடு பதிப்பகம்
                                     

எம்.யுவனின்  'தீராப் பகல்'முழுக் கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை  இரண்டாவது. யுவன் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாகக்  கவிதைகள்  எழுதி வருகிறார். யுவன் சந்திரசேகரின் புனைவெழுத்துக்கள் பேசப்பட்ட அளவுக்கு யுவனின் கவிதைகள் பேசப்படவில்லை. சக கவிஞனாக என் ஆதங்கம் இது. இந்த முன்னுரையில் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்ளப் பார்த்திருக்கிறேன். எனினும்  யுவன் கவிதைகள் பற்றிய முழுமையான பார்வை அல்ல இந்த முன்னுரை. அதற்கான முன்னெடுப்பு.

                            காலச்சுவடு பதிப்பகம்
                                               
மிகவும் பரவசத்துடனும் வாசிப்பின் கிறக்கத்துடனும் எழுதியது விபூதி பூஷண் பந்தோபாத்யாயாவின் 'பதேர் பாஞ்சாலி'முன்னுரை. நாவலின் வரிகளும் திரைப்படத்தின் பிம்பங்களும்  மாறி மாறிப் படர்ந்த உணர்வைக் கொண்ட மனநிலையில் எழுதியது. மறைமுகமாக விபூதிபூஷணுக்கும் மொழிபெயர்ப்பாளர் ஆர். ஷண்முகசுந்தரத்துக்கும்'பதேர் பாஞ்சாலி'யை அந்தரங்கக் கனவாக மாற்றிய சத்யஜித் ராய்க்கும் செலுத்திய மானசீக அஞ்சலி.

                                                                    மாற்று வெளியீடு.



Viewing all articles
Browse latest Browse all 181

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!